(நாச்நாசியாடினேன் நாடி….(1)

குழலோசை கேட்கிறது−என்

கோவிந்தனின் குழலோசை கேட்கிறது;

கழலிலே சலங்கை மின்ன−என் கண்ணன்

கணுக்கால் அசைவதும் தெரிகிறது;

ஒய்யாரமாய் அவன் புன்னை மரக்கிளையில்

சாய்ந்திருப்பதை காண முடிகிறது;

மை நிற கூந்தலில் அவன் சூட்டியுள்ள

மல்லிகையின் மணம் உணர முடிகிறது!
கண்மூடி அவன் கோலத்தை−

சற்று உள் வாங்க நினைத்தேன்;

கண நேரத்தில் அவன் அருகாமையை−என்

காதலினால் அறிந்தேன்!
கைப்பிடித்து, என்னை உற்று நோக்கி−

மையலுடன் சிரித்தான்;

பைநாகத்தான் அவன் பார்வையின்

ஸ்பரிசத்தில்−

தையல் நான்−என் வசம்−முழுதுமாய் இழந்தேன்!
அவன் மூச்சு என் மேனியை வருட−

அவன் பேச்சு என்னையே திருட−

அவன் என்னில் கலந்தான்;−நான்

அவனில் கரைந்தேன்!
“கண்ணன் என்னிடம்” என்று−

கண நேரம் இறுமாந்தேன்!

எண்ணி முடிக்கும் முன்னரே−

என்னை ஏமாற்றி மறைந்தான்!

“பெண் பாவம் பொல்லாது”−இது

புரிந்திருந்தும் பறந்து விட்டான்;

அண்ணல் அவன் திரும்பி வர−நான்

அவனையே வேண்டி நின்றேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s