(உள்ளம் உருகுதையா, முருகா, உன்னடி காண்கையிலே மெட்டு)(20)

நெஞ்சு நெகிழுதடா, கண்ணா−

நின்னை நினைக்கையிலே..

கொஞ்சத் துடிக்குதடா, கிள்ளி,

கன்னக் கதுப்பினையே! (நெஞ்சு)
ஓடி விளையாட, உன்னுடன்−

உள்ளம் ஏங்குதடா…

ஆடி, அகம் குளிர, எனக்குள்−

ஆசை பொங்குதடா! (நெஞ்சு)
பேதை மனதினிலே, உன் மேல்−

காதல் பிறந்ததடா!..

சோதை பாலகனே! என்னை−

சேரவே, வந்திடடா! (நெஞ்சு)
வேங்குழல் ஓசையிலே−மனமும்−

உருகியே போகுதடா;

தாங்கவில்லை தாபம், எனையும்−

தாங்கிட  தோணாதோடா? (நெஞ்சு)
ஏனிந்த தாமதமோ, கண்ணா,

என்று தான் வருவையோ, நீ?

நானுந்தன் தாளடைந்தேன், கண்ணா,

நங்கைக்கு அருள்வையோ, நீ?  (நெஞ்சு)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s