எந்த உறவு ஆனாலும் அவன் போல் ஆமோ?
என் கண்ணனுக்கு நிகர் இங்கே யாரே தாமோ?
எந்த உறவு ஆனாலும் அவன் போல் ஆமோ?
என் கண்ணனுக்கு நிகர் இங்கே யாரே தாமோ? (எந்த)
என் குழலில் மலர் சூடி மகிழ்ந்தே இருப்பான்;
அவன் குழலை நான் ஊத, தனையே கொடுப்பான்! (என் குழலில்)
நான் பாட, அவன் ஆட, பொழுதே இனிக்கும்;
நான் பாட, அவன் ஆட, பொழுதே இனிக்கும்!−
கண்ணனின் காதலே என்னிடம்! (எந்த)
ராதை இல்லை; ருக்மிணியும் பக்கம் இல்லை!
கோதை எனை கை கொள்ள தடையும் இல்லை!−(ராதை)
பாதை நாடி, ஓடி வந்தேன், தனையே தந்தேன்;
பாதை நாடி, ஓடி வந்தேன், தனையே தந்தேன்!
பாவையும், யாவையும் இழந்தேன்! (எந்த)