(ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு மெட்டு)(8)

ஒரு நாள் இரவு, அழகிய கனவு−

ஆயன் வந்தான், என் அருகினிலே…

ஒரு நாள் இரவு, அழகிய கனவு−

ஆயன் வந்தான், என் அருகினிலே!
மானே, என்மேல் கோபம் வேண்டாம்−

நானே வந்தேன், காண் என்றான்;

நானே வந்தேன், காண் என்றான்!(ஒரு நாள்)
கார்குழல் சரிந்தது நெற்றியிலே−அவன்

வேங்குழல் இருந்தது இடையினிலே;

கார்குழல் சரிந்தது நெற்றியிலே−அவன்

வேங்குழல் இருந்தது இடையினிலே!

என் குழல் சூடிட மலர்களையே−அவன்

மென்கரம் ஏந்திட, மயங்கி நின்றேன்−

மென்கரம் ஏந்திட, மயங்கி நின்றேன்!
என்னுயிர் பைங்கிளி, ஏனோ இளைத்தாய்−

என்னுயிர் பைங்கிளி, ஏனோ இளைத்தாய்,

ஏக்கம் தானோ, சொல் என்றான்;

கண்ணா, உன்னை கண்ட பின்னாலே−

இன்னும் வேண்டுவது ஏதென்றேன்;

இன்னும் வேண்டுவது ஏதென்றேன்!
எத்தனை காலங்கள் ஆனாலும், என்

சித்தத்தில் இருப்பது நீ என்றான்;

எத்தனை காலங்கள் ஆனாலும், என்

சித்தத்தில் இருப்பது நீ என்றான்!!

இத்தனை போதுமே என் கண்ணா,−இனி,

எத்தனை வரினும், நீ துணை என்றேன்;

எத்தனை வரினும், நீ துணை என்றேன்;

எத்தனை வரினும், நீ துணை என்றேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s