(ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் மெட்டு)

ஓராயிரம் பூக்களிலே நீ சிரிப்பதை பார்க்கின்றேன்;−

உன் பார்வை தொடும் கணத்தில்−

உடல் சிலிர்ப்பதை காணுகின்றேன்! 

(ஓராயிரம்)
என் நினைவென்னும் மலர் பறித்து−

உனை தினம் தினம் வணங்கிடுவேன்;

என் சொல்லிலும், செயலிலுமே−

உனை கலந்திட செய்திடுவேன்!

உன் சரணங்கள் பிடித்து விட்டேன்;−

இனி சலனங்கள் எனக்கு இல்லை!

(ஓராயிரம்)
எந்த கணத்திலும் உனை நினைப்பேன்−

என் இதயத்தில் இருத்தி வைப்பேன்;

உயிர் மூச்சினில் கலக்க விட்டு−

உன்னை என்னிலே உணர்ந்திருப்பேன்!−

இந்த ஜீவனும் உள்ள வரை−

என் கண்ணனை காதலிப்பேன்!

(ஓராயிரம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s