(கருநீல மலை மேலே தாய் இருந்தாள்;காஷ்மீர பனிமலையில் மகன் இருந்தான்−மெட்டு)(9)

கண்ணன் அவன் வேங்குழலை மறைத்து வைத்தேன்;
அண்ணல்−−அது−−காணாமல், தவித்து விட்டான்!

என்னவளே, என் குழலை தந்து விட்டால்,

உன் வசமே நான் என்று, சொல்லி நின்றான்!(கண்ணன்)
இப்படி ஓர் வாய்ப்பு, இனி எனக்குண்டோ?−இந்த

இடையனையே மடக்கிவிட, என நினைத்தேன்;

எப்படியோ, என் எண்ணம் ஈடேறும்−இனி

என் வசமே அவன் என்று, அக மகிழ்ந்தேன்!
என்னவளே, என் குழலை தந்து விட்டால்,

உன் வசமே நான் என்று, சொல்லி நின்றான்!(கண்ணன்)
வைத்த இடம் சென்றே, நான் பார்த்த போதில்−அந்த

வேங்குழலே அங்கில்லை என்றுணர்ந்தேன்;

கைத்தலத்தில்−அதை ஏந்தி, அவன் இசைக்க,−

நான்,

கைதியைப் போல், அவன் முன்னே தலை குனிந்தேன்!
என்னவளே, என் குழலை தந்து விட்டால்,

உன் வசமே நான் என்று, சொல்லி நின்றான்!

(கண்ணன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s