(“நிலவே, என்னிடம் நெருங்காதே….நீ நினைக்கும் வகையில் நான் இல்லை”….மெட்டு)(6)

கண்ணா, நீ என்னை நீங்காதே,−உன்

காதலில் வாழ்வது, நான் அல்லவா?

மன்னா, நீ என்னை மறவாதே,−என்

மனதில் இருப்பது நீ அல்லவா?  (கண்ணா)
ஆநிரை மேய்த்த அண்ணலே, நீ−இந்த

ஆயிழையாள் உளம் அறியாயோ?..

“பா” நிறை கொண்டு, பக்கம் வந்தேன்;−இந்த

பாவையின் தேவையே உணராயோ?…

(கண்ணா)
ஆவியில் கலந்த தெள்ளமுதே!−எனை

ஆருயிராய், நீ ஏற்பாயோ?−

கோவிந்தனாய், அன்று காத்தாயே!−இந்த

கோதையை, உன் கழல் சேர்ப்பாயோ?..

(கண்ணா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s