(மங்களம்)(அன்பனுக்கு அன்பனே நீ−மெட்டு்)

சித்திரையின் ஆதிரை நாள் உதித்தவனே, மங்களம்−

சீர் மிகுந்த பூதூரின் சீதனமே, மங்களம்;

ஆசூரி கேசவனின் அருந்தவமே, மங்களம்−

ஆளவந்தார் திருவடியே, நித்ய சுப மங்களம்!
இருநிலமும் கொண்டவனே, உந்தனுக்கு மங்களம்−

ஈடில்லா இணையடியாய், என்றும் சுப மங்களம்;

உயிர்கள் உய்ய வந்தவனே, உந்தனுக்கு மங்களம்−

ஊமையை நீ வாழ வைத்தாய், நித்ய சுப மங்களம்!
எட்டெழுத்து சொன்னவனே, என்றும் சுப மங்களம்−

எம்பெருமானாரே, நித்ய சுப மங்களம்;

ஐந்து குருமார்கள் தந்த அற்புதமே,  மங்களம்−

என்றும் எதிராசா, நின் பொன்னடிக்கு மங்களம்!
மங்களமாம் நின் நாமம்−

சொல்ல, சொல்ல மங்களம்;

மங்களமாம் இணையடிகள்

கொள்ள, கொள்ள மங்களம்!
மங்களமாம் மங்களம்,

மங்களமாம் மங்களம்……..
(எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்,

இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிரே!!)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s