(விழி கிடைக்குமா, அபயக்கரம் கிடைக்குமா? மெட்டு)

இதம் கிடைக்குமா? இன்ப நிலை கிடைக்குமா?

எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா?−எனக்கு

எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா? (இதம்)

−−−−−−−

மலை போல துன்பங்கள் எனை வந்து வாட்டும் போது−

“கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா?−நீ

“கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா? (இதம்)

−−−−−−−

மதத்தாலே பல நூறு பிழைகள் நான் செய்திடினும்−என்னை

இதத்தாலே பணி கொள்ள நீ வருவாயா?

குன்றாத வினையேனை, குணமொழிந்த தமியேனை−

நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா?−நான்

நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா? (இதம்)

−−−−−−−+

இத்தனை நாள் உனை பிரிந்தேன் எந்தன் இருவினையால்!−

இனி நீ இட்ட வழக்காக எனை ஆக்குவேன்;

பல் நோவும் எனை வந்து தினம் தினமே

நலக்கும் போது−

வல்வினையேனை விடுவிக்க நீ வருவாயா? (இதம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s