(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? மெட்டு)(7)

கண்ணனிடம் சென்ற உள்ளம் கடைதேறுமா?
மன்னன் மேல் கொண்ட மையல் மணம் பெறுமா?

“உன்னவனே நான்” என்றான், உண்மையாகுமா?

என்னவன் மேல்  கொண்ட எண்ணம் ஈடேறுமா?(கண்ணனிடம்)
கன்னம் என்னும் மேடையிலே, இதழ் பதித்தான்−

இன்னும், இன்னும் வேண்டி நிற்க, “நாளை” என்றான்;

தன்னைத் தந்து, என்னை வென்றான்− தன்யனானேன், நான் தன்யனானேன்;

என்னை, எங்கும் கண்டிடாமல், மயங்கி நின்றேன்−அங்கே, மயங்கி நின்றேன்! (கண்ணனிடம்)
அன்று தந்த, ஆயன் அன்பு, பொய்யல்லவே−

கன்று மேய்த்த கள்வன் காதல், மெய்யல்லவோ?;

ஒன்றும்,ஒன்றும், சேர்ந்த பின்னே, “ஒன்றானதே”−

இங்கே−”ஒன்றானதே”;−

இன்று முதல், எந்தன் வாழ்வு அவனதானதே, என்றும் அவனதானதே! (கண்ணனிடம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s