​(நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா?..மெட்டு)(11)

நினைவும், கனவும் எனக்கு−அந்த

நீலக் கண்ணன் தானே!

எனையும், நானே இழந்தேன்−இதுவும்

அவனின் லீலை தானே!

இதுவும் அவனின் லீலை தானே! (நினைவும்)
நேற்று, இன்று, நாளை−என்று

நாளும், பொழுதும் அவனே!

மாற்றம் அணுவும் இல்லை, இது என்

மனதின் “பா”வம் தானே! (நினைவும்)
வானும், மதியும், போலே−அந்த

வள்ளல் அவனும், நானும்;

தானும், தன்னை தந்தான்−இன்று

தன்யன் ஆனேன் நானே!

காணும் காட்சி எல்லாம்−எந்தன்

கண்ணன் வடிவம் தானே;

நானும் எங்கு செல்வேன்?−இனி, என்

நாதன் தானே எல்லாம்! (நினைவும்)
பிறவி தோறும் அவனை−நானும்

பாடிப்பாடி, ரசிப்பேன்;

மறுவி, மயிலின் இறகாய்−அவனின்

குழலில் குடியும் இருப்பேன்!

இரவு நிலவின் ஒளியாய்−அவனை

என் இதயம் நிரப்பி வைப்பேன்;

உறவு எல்லாம் அவனே−என்று 

உணர்ந்தே, உருகி இருப்பேன்! (நினைவும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s