பிறந்த பயன் பெற்றேனே…)

அந்தியும் மயங்குது, ஆவினம் மயங்குது;

ஆயனின் அருகிலே, பெண்மையும் மயங்குது;

மந்தியும் மயங்குது. மயிலினம் மயங்குது;

மாதவன் நெஞ்சம் கன்னியில் மயங்குது!
கண் இணை மயங்குது; கருத்தும் மயங்குது;

கண்ணன் கையில் வேங்குழல் மயங்குது;

எண்ணமும் மயங்குது; இதயமும் மயங்குது;

ஏனெனப் புரியாமல், இரு உள்ளம் மயங்குது!
கணங்களும் மயங்குது; காலமும் மயங்குது;

கன்னியின் மனமோ, கண்ணனில் மயங்குது; தினம் தினம் மயங்கியே, தலைவனில் கரையுது;

தலைவனில் கரைந்தே, தனி சுகம் காணுது!
“தான்” அங்கு மயங்கியே, தலைவன் தாள் அடையுது;

தலைவன் தாள் இணைகளில், 

தன்னிறைவு அடையுது;

தன்னில் கொண்டதும், தலைவன் மனம் மகிழுது;

தலைவன் மனம் மகிழவே, பிறந்த பயனும் நிறைந்தது!!

இருவினைகள் எமை என்றும் நலியாமலே−உங்கள்

இருவிழியால் எமை என்றும் பாருங்களேன்! (திருவாதிரை)
ஆசூரி கேசவனார் அத்தன் ஆனார்;−ஒரு

மாசிலாத காந்திமதி அன்னை ஆனார்!

நாசம் கலி அடைய நீரும் வந்தீர்;−உம்

தேசுக்கு ஈடு இணை ஏதும் உண்டோ? (திருவாதிரை)
ஐந்து குருமார்களிடம் பாடம் கற்றீர்;−ஒரு

ஆறு வார்த்தை கேட்டு நீரும் வழியும் பெற்றீர்;−

ஏழுமலை அப்பனுக்கு சங்காழி அளித்தீர்;−அந்த

எட்டெழுத்து மந்திரத்தை எமக்கே தந்தீர்!−அந்த

எட்டெழுத்து மந்திரத்தை எமக்கே தந்தீர்! (திருவாதிரை)
எம் பிறவி பிணி அகல உம்மை கொண்டோம்;− நீர்

எம் பாவம் தொலைத்து விடும் “புனிதம்” அன்றோ?

எம்பெருமானாரே “அபயம்” என்றோம்;−இனி

எம்பெருமான் திருவடிகள் எமக்கே அன்றோ?−இனி

எம்பெருமான் திருவடிகள் எமக்கே அன்றோ? (திருவாதிரை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s