​பள்ளிக் கொண்ட அழகு கண்டு−

பரவசமே,  மனமானதே…

அள்ளி வைத்தேன், உள்ளில்−

அந்த வடிவின் வசீகரமே!
கள்ளத்துயிலே ஆனாலும்−

கண்ணுக்கு விருந்தாமே;

மெல்லிய உன் அரிதுயில்−

மாந்தர்க்கு−மருந்தாமே!
பாண்டவர் பத்தினிக்கு, அன்று−

புடவை அளந்த வருத்தமோ?

மாண்ட, குரு புத்திரர்−

மறுபடி கொணர்ந்த வருத்தமோ?
கற்பாறை பெண் அணங்கின்−

கற்பு காத்து, சோர்ந்தனையோ?

மற்போரில், மாமன் ஊரில்,

மல்லரை போரிட்டு, சோர்ந்தனையோ?
தாள் கொண்டு, அன்று−

தரணி அளந்த களைப்போ?

தோள் கொண்டு, அந்த−

தூமலை, தாங்கிய களைப்போ?
காளியன் சிரத்தில் அன்று−

களிநடம் புரிந்த களைப்போ?

கோளிரண்டும் ஒன்றாய் கொணர்ந்து,

நாளினை மாற்றிய களைப்போ?
ஆய்ச்சியிடம் கட்டுண்டு−

அஞ்சி, அழுத களைப்போ?

பேய்ச்சி முலை உண்டு−அவளின்

பொய் தேகம் முடித்த களைப்போ?
அடியோங்கள் உன்னைப் பிரிந்து,

அல்லல் படுவதால், வந்த களைப்போ?

அடி பற்றி,  உய்ய மறுக்கும்−எமது

அறியாமையால், வந்த களைப்போ?
ஏதென்றாகிலும், நீ,
பள்ளிக் கொண்ட அழகு கண்டு−

பரவசமே, மனமானதே!

அள்ளி வைத்தேன், உள்ளில்−

அந்த வடிவின் வசீகரமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s