(30)

​முத்தொன்று இதழ் பதித்தாய் −அன்று

முழு மதியின் ஒளியினிலே;

தித்திக்குதே இடம்− நான்

தொடுகின்ற நேரமெல்லாம்;

மெத்தென்ற கரம் கொண்டு−என்

முகவாயும் ஏந்தி நின்றாய்;

மொத்தமும், பித்தேறி, நான்−

மோகத்தில் நிலை இழந்தேன்!

வான் உமிழும், நிலவொளியின் கீழ்−

வாடிக்கையாய் நாம் இணைவோம்;

கானகத்தின் குளிர் காற்றில்−நம்

கரம் கோர்த்து,  சுகம் பெறுவோம்;

தான் உகந்த துணை என்றே−

தமக்குள்ளே, அகம் மகிழ்வோம்!

இன்றோ−

பார்வையாலே, எனை தின்றதெல்லாம்−

பழங்கதையாய்  ஆகிப் போச்சு;

கார்கால வெயில் போலே,  உன்−

காதலுமே மறைஞ்சு போச்சு;

யார் அனுப்பி, உனை மீட்டெடுக்கவென−

ஏழை மனமும், ஏங்கிப் போச்சு!

வெண்ணை உண்ட மேனியென்றால்,

வழுக்கிக் கொண்டு போய் விடுமா?

என்னை, கொள்ளை கொண்டு போனதெல்லாம்−

இல்லை என்று ஆகிடுமா?..

உன்னை, எந்தன் “காதல்” என்னும்−

உறு கயிறால், நான் பிணைத்திடுவேன்;

பின்னை, நீயும் போவதெங்கே?

பொருந்தி, என்− “உள்ளில்” வந்து, 

விரும்பி, உறைவாயே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s