(2)(துயிலாத பெண் ஒன்று கண்டேன் மெட்டு)

கண்ணன் இங்கே வந்தான்;

என்றோ?…இன்றே− என் கனவில்…

கண்ணன் இங்கே வந்தான்!

முல்லைச் சரம் கொண்டு வைத்தான்;−கூந்தல்

பில்லை, நேர் செய்து பார்த்தான்;

“இல்லை” எனாமல், இதழால்−இன்பம்

எல்லையிலாது அளித்தான்−இன்பம்

எல்லையிலாது அளித்தான்!  (கண்ணன்)

வரம்பேதுமில்லாமல், அன்பை−வாரி

வரமாக, எனக்கே, கொடுத்தான்;

மரம் போலும், மெய் மறந்து நின்றேன்;−எனை

கரமேந்தும் கார்மேகம் ஆனான்;−எனை

கரமேந்தும் கார்மேகம் ஆனான்!  (கண்ணன்)

“எனக்காக பிறந்தாய் நீ” என்று−என்

மனம் ஏங்கும் சொல் ஒன்று சொன்னான்;

உனக்கேற்ற பாவை, நானென்றால்−இனி

எனக்கேது ஒரு ஜென்மம் என்றேன்;−இனி

எனக்கேது ஒரு ஜென்மம் என்றேன்!  (கண்ணன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s