(12)  நாச்சியார் மறுமொழி..

கண்ணா, எனக்கு நீ வழி சொல்வாய்;

கருணையே வேண்டினேன், அருள் செய்வாய்! (கண்ணா)
உள்ளம் உனையே நாடிடுதே−

உருகியே நெஞ்சம் வாடிடுதே;

உனக்கென் நிலைமை புரியாதோ?−

உண்மையை உன்மனம் அறியாதோ? (கண்ணா)
எந்தனுக்கேனிந்த சோதனையே?−

நன்றோ நீ தரும் வேதனையே?

என்றோ, என்னிடம் நீ வருவாய்?

இன்றோ, நாளையோ, அறியேனே! (கண்ணா)
அன்பினால் அல்லலும் வந்திடுமோ?

அம்புயக்கோனே, வாய் திறவாய்!−

துன்பமும் தொடர்கதை ஆயிடுமோ?

தூயவனே, நீ பேசிடுவாய்! (கண்ணா)
நரகமும், சுவர்கமும் எனக்கு−உன்னை

பிரிதலும், சேர்வதும் தான் அன்றோ?

பரம்பொருளே, இதை உணராயோ?−

பரிந்தே வந்தென்னை சேராயோ? (கண்ணா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s