​வாடினேன் வாடி….
கல்லாய் போனது ஏன் கண்ணா?−

எந்தன் கலி தீர்க்காமல் நீ−

கல்லாய் போனது ஏன்கண்ணா?
நில்லாது என் நெஞ்சம்−

தத்தளிக்கும் போது−

“இல்லை இனி துயர்” என்று

ஒரு வார்த்தை சொல்லாமல்  (கல்லாய்)
செந்நீர் அழுந்தி அன்று ஓர் களிறு−

“எந்தன் கண்ணா அபயம், அபயம்” என்று

கதறி அழுத வேளையில்−

பதறி வந்தாயே பரந்தாமா− இன்று (கல்லாய்)
மானம் காத்திட வேண்டி−ஓர் அபலை−

“மாதவா, மனமிரங்காய்!” என்றலற−

தானமாய் தந்தாயே உன் அருளை−

தயாபரனே! தாமோதரா!−இன்று (கல்லாய்)
எல்லா உயிர்க்கும் தாய் நீ அன்றோ?

அல்லாதவர் உனக்கு எவரும் உண்டோ?

கல்லாய் இருப்பது கண்ணனுக்கு அழகோ?−

நல் துணை வருவாய், நாரணா, இன்றே! (கல்லாய்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s