​தேடுகின்றான்….

தேடுகின்றான் கண்ணன்−என்னை

தேடுகின்றான்;

வாடுகின்றான், என் பிரிவில்

மிக வாடுகின்றான்!
கண்ணனுக்கே ஆமது காமம் என்றேன்;

கண்ணில் வைத்தான் என்னை;

மண்ணவர்க்கினி வாழ்க்கைப் படேன் என்றேன்−

மனதினுள் மறைத்து வைத்தான் என்னை!
உண்ணுஞ்சோறு, பருகு நீர்,

தின்னும் வெற்றிலை எல்லாம் நீ

என்றேன்;

விண்ணகர் மேவும் என் ஐயன்−

என்னை எங்கு வைக்கத் தகும் என்று−
தேடுகின்றான்−எனக்கு ஓர் இடம்

தேடுகின்றான்;

வாடுகின்றான்−அது அமையாது−

மிக வாடுகின்றான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s