​நம்மாழ்வார் மோக்ஷ வைபவம் கொண்டாடிய, இந்த சமயத்தில், அடியேனுக்கு, ஒருசிறிய அவா எழுந்தது.

வாசிக கைங்கர்யமாக, ஆழ்வார் மேல், “வாழித் திருநாமம்” எழுத, ஆசை பிறந்தது.. இதை, “விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி” என பெரியோர்கள் நினைத்து விடாமல்,  ஒரு “மழலை முயற்சியாக”, அங்கீகரிக்க வேணுமாய், ப்ரார்த்திக்கிறேன்….
வாழி சடகோபன், வாழி சடகோபன்,

வாழி பராங்குசன், வாழி, வாழி,

வாழி குருகை பிரான், வாழி ஞானபிரான்,

வாழி வகுளாபரணன், வாழி, வாழியே!    (1)
வாழி அவன் திருநாமம்,

வாழி அவன் பொன்னடியே;

வாழி அவன் திருமொழிகள்−

வாழி அவனளித்த த்ராவிட வேதமே!          (2)
சேனை முதலி அம்சமாக,

சகம் உதித்தான் வாழியே;

வேதம் தமிழ் செய்ய வந்த−

ஞான தேசிகன் வாழியே!                               (3)
மெய் ஞான குருவாகி, இப்புவியின் கலி நீங்க,

வைகாசி விசாகம், வந்துதித்தான் வாழியே;

பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கமும்,

போகட்டும் என்றுரைத்தான், 

பரப்ரம்ம யோகியே!(4)
அவதாரம் செய்தலமும், அடையாளம் பெற்றிடவே,

அழகான திருநாமம், இரண்டு கண்டான் வாழியே;

குருகூர் நம்பி எனவும், குருகைப்பிரான் எனவும்,

உறு பெருமை சேர்த்த, 

“உதய பாஸ்கரர்” வாழியே!(5)
காரியின் திருமகனாய், உடையநங்கை உதரத்தே,

மாறி வந்து தோன்றிய, மாறன் என்றும் வாழியே;

பாரிலுள்ளோர் துயர் துடைக்க, பாமாலை இரண்டிரண்டும்−

பரனடிக்கு, பரிந்தளித்த,”நாவீரன்” வாழியே! (6)
பக்தி எனும் அங்குசத்தால், பரமன் எனும் பெருங்களிறை,

தன் வசம் செய்த, பராங்குசன் வாழி, வாழியே;

“பரதெய்வம்” திருமாலென, 

வீறு கொண்டு விளக்கிய,

“நாவீறுடையான்” நாளும் மிக வாழியே!  (7)
உருகாத மனதையும், உருக வைக்கும்−

திருவாய்மொழி அந்தாதியாம் தேனை,

திருமாலுக்கு, தொகுத்தளித்த−

“திருவாய்மொழிப் பெருமாள்”, 

அனுதினமும் வாழியே!  (8)
கருவறையின் இருள் நீக்கி, காசினியோர்க்கு,

“திருவிருத்தம்” தந்து, 

துலங்க வைத்தான் வாழியே!

அருமறை நூல், ஆசிரியப்பாவதனால்,

அவனிக்கு, இதமளித்த பிரான் வாழியே!  (9)
“பெரிய திருவந்தாதி” எனும், அரும் பொருளீந்த,

“பொருநல் துறைவன்” வாழி, வாழியே!

மெய் ஞான கவி தந்து, 

மேதினியை தாம் காத்த,

“ஞானத்தமிழ் கடல்” என்றும் வாழியே!  (10)
“பாவலர் தம்பிரான்” வாழி, 

“பராங்குச நாயகி” வாழி, 

“நாவலர் பெருமாள்” வாழி,

“நம்மாழ்வார்” திருவடி வாழி,

“பவரோக பண்டிதர்”  பல்லாண்டு வாழி,

“ப்ரபன்ன ஜனகூடஸ்தர்” 

வாழி, வாழி, வாழியே! (11)
“துயரறு சுடரடி தொழுதெழு” என்ற,

“தொண்டர் பிரான்” வாழி!

தொல்லை மா வெந்நரகம்−

சேராமல் காத்த−

“தென்னரங்கன் பொன்னடி” 

வாழி, வாழி, வாழியே!!  (12)
(நம்மாழ்வார் திருவடிகளே ஸரணம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s