​அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றாய்;

ஆவலில் யானும் அழைத்தேனே!

இழைத்த வினைப் பயன்−

ஈர்ப்பதனால், 

யானும்,சற்றே அகன்றேனே!

உழைத்துச் சேர்த்தேன் கர்ம வினை−

ஊக்கம், கொஞ்சமும் குறையாமல்!

என்னுள், நீயும், எழுந்தருள, 

யானெங்கே, உனக்கு இடமளித்தேன்?

ஏதத்தின் உருவாய், அவதரித்தேன்!

ஆயினும், நீ வர வேணுமாய், ப்ரார்த்தித்தேன்!

ஐயமும், அச்சமும், கலவாமல்,

ஐயன்−நின்−அருள், பெருகுமென்றேன்!

ஒரு பிறவி, இனி, எனை,தீண்டாமல்,

உன் இணையடி, யானும் சேர்ந்திடவே,

சொல்வேன், உந்தன் திருமந்திரம்−

“ஓம் நமோ நாராயணாய,”

“ஓம் நமோ நாராயணாய!!”

அடிமை, என் குரல் கேட்டிடா!

அருளுடன், விழியால் பார்த்திடடா!

அஃதும், இஃதும் பாராமல்,

என் கண்ணா, எனை நீ, 

அணைத்திடடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s