(36)

​என் நினைவில், உன் இசையும் நின்று போனதோ?

ஏக்கம் கண்களில் தெள்ளத் தெரிகிறதே!

வாய் திறவாமலே, நீ “வா”வென்று சொல்ல,

சாய்ந்திடும் தோள் தர, சடுதியில்−வருவேனே!
ஈர விழிகளில், உன் காதல் மின்னுவது−

சாரல் மழையாய், எனை சிலிர்க்க

வைக்கிறது; மன−

பாரமெல்லாம் புறந்தள்ளி, எனை−

ஆரத்தழுவிடடா, என் அரவிந்தனே!
தீயீன் நாவாய், தனிமை எரிக்க,

நீயும் ஏனோ, கருகி உலர்ந்தாய்;

நானோ, உனக்காய் காத்து நிற்க,

நாளும், நேரமும், பார்ப்பதுமேனோ?
அணைக்க மறுக்கும் ஒவ்வொரு நொடியும்−

அடையும் சுகமும் விலகிச் செல்லும்;

இணைய வருவாய், இதமே தருவாய்;−

இந்த நொடியும், விடியல் காணும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s