(யசோதை “பா”வம்)

பின்னை இரவின் போதினிலே,

பள்ளி கொள்ள, நீயும் வந்தாய்;

நண்பகல் பொழுதும் ஆச்சுதடா−

நம்பி, நீ கொஞ்சம் எழுந்திரடா!

ஈரேழு புவனமும், வெகு இயல்வாய்,

ஒரு சிறு வாயால், அன்று உண்டனையே!

ஆரேழு மணித்துளி போனதுவே−

அமுதுண்ண மறந்தால், என்னாவதுவே?

நேற்று நீ தின்ற வெண்ணையுமே−

நிச்சயம், நன்றாய், செரித்திருக்கும்;

இன்று உன் திருவயிறும், இந்நேரம்−

ஏதுமின்றியே, பரிதவிக்கும்!

பல்லும் துலக்க வேணுமென்றால்,

பல நிமிடம் கடந்து போயிடுமே!

நல் முத்தும் தோற்றிடும் நிறம் அவைக்கு;

நாரணா, வீண் சிரமம், உனக்கெதற்கு?

பாங்காய், திருவாய் உமிழ்ந்து விட்டு,

பானைப் பாலை பருகிடுவாய்;

ஆங்கு, ஆரேனும், வந்தெனை கேட்டுவிட்டால்,

அவன் எல்லாம் செய்தான் என சொல்லிடுவேன்!

காரார் மேனியா! என் கண்ணா! உன்

கனிவாய் சிரித்தாலே போதுமடா;

பாராது போகவே தோணுமோடா? உன்

பவளவாய் அழகுக்கு, அவர் தோற்பரடா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s