​(கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்……)

(5)

உள்ளம் நிறைந்த ஓவியமே!

உன்னை அழகாய் வரைந்தேன் அனுதினமே!

கள்ளமாய் காதல் செய்து வந்தேன்;  நீ−

கனிந்திடும் தருணமே பார்த்திருந்தேன்!

வானம் பார்த்த பூமியைப் போல்,

வாழ்நாள் நகர, நானிருந்தேன்;

கானம் மறந்த கருங்குயிலாய்−உன்

கழலிணை துறந்தே, நான் அலைந்தேன்!

துள்ளித் திரியும், கன்றே நான்;

தேடியே வருவையோ, தாய் பசுவாய்?

எள்ளில் உள்ள எண்ணையை போல், நீ

என்னை உனக்குள் என்றேற்பாய்?

தீயில் விரல்கள் வைத்தது போல்,

தீவினைக்குள் எனை இழந்தேனே;

நோயாம் பிறவி நீங்கிடவே−இனி

நீயே மருந்தென வாராயோ?

என் நான் செய்வேன்? யார் துணைவன்?

என் உயிரும் உய்ந்திட, எவன் அருள்வன்?

என்னை இனியும் ஏய்க்காமல்,

உன் திருவடி, என் சிரம் பதிப்பாயோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s