​(பஜ கோவிந்தம்−தொடர்ச்சி)
தினமபி ரஜனி ஸாயம் ப்ராத:

ஸிஸிர வஸந்தௌ புனராயத:

கால க்ரீடதி கச்சதி ஆயு:

ததபி ந முஞ்சதி ஆஸா வாயு:             (12)
காலை, மாலை, இரவு என்று−

காலச் சக்கரம் விரைந்தே ஓடும்;

பருவமும் மாறி, முதுமையும் படரும்−

இருந்தும் ஆசைகள், தினம் போல் தொடரும்!(12)
கா தே காந்தா, தனகதி சிந்தா,

வாதுல, கிம் தவ நாஸ்தி நியந்தா?

த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதிரேகா

பவதி பவார்ணவ தரணே நௌகா!         (13)
யார் உன் மனைவி? எது உன் செல்வம்?

யார் தான் உனக்கு தருவார் அபயம்?

நல்லவர் நட்பு என்னும் ஏணியே−

இல்லறக் கடலை கடந்திடும் தோணியே!  (13)
ஜடிலோ முண்டி லுஞ்சித கேஸ:

காஷாயாந்தர பஹீக்ருத வேஷ:

பஸ்யன்னபி ச ந பஸ்யதி மூடோ

ஹ்யுதர நிமித்தம் பஹீக்ருத வேஷ:              (14)
சடைத்தலை, நீள்முடி, மொட்டை என்று−

இடைக்காவியுடன் போடுவான் வேஷம்;

ஒரு சாண் வயிற்றுக்குப் பலவித ஆட்டம்−

பார்த்தும், பாராதது போல் ஓட்டம்!                   (14)
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்

தஸன விஹீனம் ஜாதம் துண்டம்;

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்−

ததபி ந முஞ்சதி ஆஸா பிண்டம்!                       (15)
தளர்ந்தது தேகம், நரைத்தது ரோமம்−

உதிர்ந்தன பற்கள், உருவமே மாற்றம்;

கோல் ஊன்றிச் செல்லும் கிழவன் நெஞ்சிலும்−

ஆல் போல் ஆசை தழைத்தோங்குகிறதே!        (15)
அக்ரே வஹ்னி:, ப்ருஷ்டே பானு:

ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:

கரதல பிக்ஷஸ்தருதல வாஸ:

ததபி ந முஞ்சதி ஆஸாபாஸ:!                               (16)
காலைச் சூரியன், கனல் நெருப்பென்றும்−

காலிரண்டு அணைத்து விரட்டுவான் குளிரை;

பிச்சையில் பிழைப்பான்; மரத்தடி படுப்பான்;

இச்சைத் தீயில், இவனுமே அடக்கம்!                   (16)
குருதே கங்கா ஸாகர கமனம்,

வ்ரத பரிபாலனம் அதவா தானம்;

ஞான விஹீன: ஸர்வ மதேன−

முக்திம் ந பஜதி, ஜன்ம ஸதேன!                          (17)
கங்கை ஸ்நாநமும், கடல் நீராடலும்−

நோற்கும் நோன்பும், செய்யும் தானமும்,

விடுதலை என்றும் தந்து விடாது−

உள்ளத் தெளிவு, இல்லாத போது!                       (17)
சுரமந்திர தருமூல நிவாஸ:

ஸய்யா பூஸ்தலம் அகிலம் வாஸ:

ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:

கஸ்ய சுகம் ந கரோதி விராக:?                             (18)
மரத்தடி தன்னில் அவனுக்கு இருக்கை;

இரவில், மண்ணில், தலை வைத்து படுக்கை;

எல்லா சுகமும் வெறுத்தவன் வாழ்வில்,

வெள்ளம் போலே, ஆனந்தம் தானே!                  (18)
யோகரதோ வா, போகரதோ வா,

ஸங்கரதோ வா, ஸங்கவிஹீன:,

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்−

நந்ததி, நந்ததி, நந்ததியேவ!                                 (19)
தவத்தில் இருப்பனோ, சுகத்தில் திளைப்பனோ−

துணையுடன் இருப்பனோ, தனித்தே இருப்பனோ,

எவனின் சிந்தை, இறைவனில் கலப்பதோ−

அவனும் காண்பது, ஆனந்தம் தானே!                (19)
பகவத் கீதா, கிஞ்சிததீதா,

கங்காஜல லவ கணிகா பீதா,

ஸக்ருதபி யேன முராரி ஸமர்ச்சா,

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா!                         (20)
கண்ணனின் கீதை அறிவாய் கொஞ்சம்;

கங்கை நீரும் அருந்துவாய் கொஞ்சம்;

மாலவனை,  ஒரு கணமேனும் வழிபடு; −

காலனின் பயத்தில் இருந்து நீ விடுபடு!             (20)
புனரபி ஜனனம்; புனரபி மரணம்;

புனரபி ஜனனீ ஜடரே ஸயனம்;

இஹ ஸம்ஸாரே பஹீதுஸ்தாரே, 

க்ருபயாபாரே, பாஹி முராரே!                               (21)
மறுமுறை பிறப்பு, மறுமுறை இறப்பு−

மறுமுறை கருவினில் ஒரு குடியிருப்பு;

பிறவிப் பெருந்துயர், இனியும் வேண்டாம்;−

இரங்கியே நீயும், இறைவா, காப்பாய்!                (21)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s