(கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்…..)

(7)

நினைவில் நிறைந்த நித்திலமே!
நெஞ்சம் மயங்குதே அனுதினமே!

பிணையாய் வந்தேன் இவ்விடமே! அது−.

பிணியாய் தொடருதே யுகம் யுகமே!
இங்கும் சேர்த்தேன்,  இருவினேயே−

இம்மியும் உனையே நினையாமல்;

பொங்கும் கடலிடை வங்கம் போல்−நான்

போயும், வந்தும், நிலை அழிந்தேன்!
தாய்மை உணர்வு  உனக்கில்லையோ? என்

தவிப்பை போக்கும் பொறுப்பில்லையோ?

ஆய் நீ எனக்கு என்பதெல்லாம்−ஒரு

ஆறுதல் சொல்லாய் போனதுவோ?
கன்றை மறந்த பசு உண்டோ? தன்

கண்களை காக்கா இமை உண்டோ?

தன்னை தாரா, தாய் உண்டோ? தன்

தேகம் நீங்கும் நிழல் உண்டோ?
கருணையின் உருவம் நீ என்றால்−என்

கலியும் தீர்ப்பதுன் கடமை அன்றோ?

மறுமுறை பிறவியில் தள்ளாமல்−எனை

மலரடி ஏற்பதுன் மகிமை அன்றோ?
வந்தேன், வந்தேன், வந்தேன் நான்;

வைகுந்தா! உன் வாசலிலே;

எந்தாய் நீயும் மனமிரங்கி, இனி

எனையும் ஒளிப்பாய், உனக்குள்ளே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s