​(கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்….)  

(8)

நீயன்றி என் நெஞ்சுக்கு ஓர் உறவும் இல்லை;

நின் சரண் அன்றி, எனக்கும் ஓர் உபாயமில்லை;

நானன்றி, நானிலத்தில், நலிந்தவனும் இல்லை;

இது−

வானாளும் வைகுந்தா, உனக்குப்− புரியாமலில்லை!

கனவிலும் பிடித்திருந்தேன், உன்னிரு பதமே; அந்த

நினைவிலே அடைந்திருந்தேன் ஒரு தனி சுகமே!

உணவுமென, மருந்துமென, உனை நானும் கொண்டேன்;

எனை புறந்தள்ளும் எண்ணம் ஏன் நீயும் கொண்டாய்?

திசை தெரியாமல் நான் தவித்திருக்கிறேனே! கொஞ்சம்−

தயை மேவ எனை, நீ அணைத்திருக்கலாமே!

இசைய மறுத்தால், நானும் எங்கு தான் செல்வேன்? உன்−

இரு கழல்கள் அன்றி, எனக்கு ஓர் அரணும் தான் எங்கே?

அமுதும், பாலும், எனக்கு, உன் அருளாகுமன்றோ?

நீ−

அள்ளித் தந்தால், எனக்கது வரமாகுமன்றோ?

குமுத மலர் உந்தன் திருப்பதமாம் தேனை−என்

கரு வண்டு நெஞ்சு, களித்துண்ணலாம் தானே?

ஆதியும், அந்தமும், இல்லாத சோதியே! எனக்கு,

அருள் செய்ய மறுப்பது, என்ன தான் நீதியே?

வாதியாய், நான் வந்தேன், உன் வைகுந்த வாசலே; ப்ரதி

வாதம் செய்யாயோ? ஈதென்ன பூசலே?

பாராமுகமெல்லாம் போதுமடா, பரந்தாமா! என்

பரிதவிப்பும், பேராறாய் பெருகுதடா நாளும்;

ஆரா அமுதே, அண்ணலே, வந்திடடா! உன்

அருளை நீ தந்திடடா; என் அருவினையும் மாளும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s