​(பஜ கோவிந்தம் மெட்டு)

(திருமணஞ்சேரி லக்ஷ்மி நாராயண பெருமாள் மீது எழுதப்பட்டது.. ஸந்தோஷ சக்தி from madipakkam என்பவரால் பாடப்பட்டு, ஶ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகளால், மாம்பலம் ஶ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில், சுமார் 4 வருடங்களுக்கு முன் CD வெளியிடப்பட்டது என்பதை சிரம் தாழ்த்தி, பணிவோடு, தெரிவித்துக் கொள்கிறேன்…)

(ஸ்தாபகாய ச தர்மஸ்ச ஸர்வ தர்ம ஸ்வரூபிணே..

அவதார வரிஷ்டாய ராம க்ருஷ்ணாய தே நம;)

அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட நாயகன்,

அகம் குளிர்ந்து உறையும் தலம்−

அடியவர் குழாம் மண்டும்,

மணஞ்சேரி திருத்தலமே!

1.(பஜ கோவிந்தம்)
மாதவனை நினை, மாதவனை நினை,

மணஞ்சேரியானை நினை மனமே!

ஏதமில்லாத எம்பெருமானின்−

பாத கமலங்கள் பற்றிடவே நினை! (மாதவனை)

2.(மூட ஜஹீஹி)
இரு விசும்பில் உள்ள இமையவர் கோன் அவன்−

இருளாம் வல்வினை போக்கவும் வல்லவன்;

திருமறு மார்பனே, திருமணஞ்சேரியில்−

அருள் கொண்டு அமர்ந்தான், அடி பணிவாயே!

3.(யாவத் வித்தோ)
சங்கம் சக்கரம் ஏந்திய கரத்தான்−

பங்கயப் பாவையை பக்கமே கொண்டான்;

எங்கும் எதிலும் நிறை திரு நாரணன்−

தங்கும் மணஞ்சேரி நீயும் அடைவாய்!

4.(மா குரு தன ஜன)
ஒரு முறையேனும் மணஞ்சேரி வருவாய்−

திருமகள் கேள்வனின் திருப்பதம் பணிவாய்;

கரியவன் கழலிணை உறுதுணை இருக்க−

வரும் துயர் வாழ்வினில் இனி உனக்கேது?

5.(சுரமந்திர தரு)
திருவரங்கம் தன்னில் துயிலே கொண்டவன்−

திருவேங்கடத்தில் தனியாய் நின்றவன்−

திருமணஞ்சேரியில் திருவுடன் அமர்ந்தவன்−

தருவான் வரங்கள், தாளிணை அடைவாய் !

6.(பகவத் கீதா)
விக்ரமன் ஆற்றின் கரை வாழ் வேந்தன்−

தக்கன செய்வான்−தளரவும் வேண்டாம்;

எக்காலமும் நீ இணையடி தொழுதால்−

அக்காரக்கனி அடைக்கலம் தருவான்!

7.(புனரபி ஜனனம், புனரபி மரணம்)
பிணியும் மூப்பும் நரையும் திரையும்−

இனி உன் வாழ்வில் நொடியில் மறையும்;

துணையாய் உனக்கு மணஞ்சேரியதனில்−

இணையடித் தாமரை என்றும் உண்டே!

8.(கேயம் கீதா)
மறவாதே ஒரு நாளும் அவனை−

பிறவா வரம் தர வல்லவன் அவனே!

இருளும் அகல, இடர்கள் தொலைய−

வருவாய் வாழ்வில் மணஞ்சேரி தலமே!

9.(அர்த்தம் அனர்த்தம் பாவய)
இச்சையினாலே எம்பெருமானை−

அச்சுதனே என வேண்டியே அழைத்தால்−

பச்சை வண்ணன் பறந்தே வருவான்;

அச்சம் எதற்கு? மணஞ்சேரி அடைவாய்!

10.(குரு சரணாம்புஜ)
பரமென்று அவனின் பதகமலம் பற்றி−

நரகமாம் துயர்கள் நீங்கிடப் பெறுவாய்!

திருமணஞ்சேரி உறையும் தெய்வம்−

வருத்தமும் தீர்த்து வாழ்வே தருமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s