(39)

​நீயாக வர வேணும் கண்ணா! உன்−

நினைவாலே வாடும், இந்த நங்கையின் முன்னால்,

நீயாக வர வேணும், கண்ணா!

அலங்காரம் காணாத கூந்தல், 

அது−உன் கரம் கொண்டு நீ கோத,

அழகாக மாறும்;

உலர்ந்தே, வெளுத்த அவ்விதழ்கள்−

உன் செவ்விதழோடு, நீ சேர்க்க−

நிறம் அவைக்கு, சேரும்!

உறக்கமில்லாத இரு கண்கள்,

உன் உருவம் கண்டாலே,

கிறங்கி, களிப்பேறும்;

மறக்க இயலாத இந்த நெஞ்சம்,

மதுரமாய், உன் நாமம் −

தினம் சொல்லி, மீளும்!

கன்னக் கதுப்பிரண்டும் அங்கே,

மன்னவனாய், லீலை நீ செய்ய,

மணம் பெற்று போகும்;

சின்ன இடை எனது, அதுவும்,

இரு கரத்தாலே, நீ அணைக்க,

சிலிர்த்தின்பம் காணும்!

பசலை நோய் பாய்ந்த என் உடலம்,

பார்வையால், நீ வருட,

புனர் ஜென்மம் ஏற்கும்;

இசைந்தால் மட்டுமே போதும்−என்

இறுகி போன வாழ்விலுமே−

புதுப்பூக்கள், அழகாகப் பூக்கும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s