​(கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்…..)

(12)
ஐம் பூதங்களில் உறைந்து,
எம் வாழ்வின் ஆதாரமானாய்;

ஐம் பொறிகளை இயக்கி,

எம்மை வாழவும் வைத்தாய்;
எங்கும் நீ நிறைந்திருந்தாலும், 

என் கண்களுக்கு, ஏனோ, 

எட்டாது போனாய்!

மனம் உனை, உணர விழைந்தாலும்,

மாயையினால், அது, முடியாது செய்தாய்!
தாய் உயிரை, சேய் உயிர்,

தேடி வந்த போதெல்லாம்,

தென்படாது, நீ, தொலைவில் நின்றாய்!

ஆய் நீயாம்; அப்பனும் நீயாம்; பின்,

அழும் குரல் கேளாமல், எங்கு நீயும் சென்றாய்?
கருவறை சிறையில், கடத்தியும் வைத்து,

இருதலைக் கொள்ளி எறும்பாக்கி விட்டாய்;

மறுபடி, மறுபடி, பிறவியே தந்து, உன் 

திருவடி தாராது, தள்ளியே விட்டாய்;
உனக்கும், எனக்கும் இடையில் இவ்வழக்கு−

பிணக்கின்றி முடியுமா, சொல் நீ எனக்கு;

எனக்கான சொத்தை, என்னிடம் தந்திட−

எத்தனை நாள் இன்னமும் பார்ப்பாயோ கணக்கு?
பொய்யன் என்று பெயர் எடுத்தால், உனை

பழிக்காதோ, இந்த உலகம்? நீ,

மெய்யனாக அருள் புரிவாய்; என்

மெய்யும், இனி விட்டு விலகும்!!
                               (முற்றும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s