(47)

​நாணம் ஏனடி, பைங்கிளியே,

நானும், நீயும் தான் இங்கு!

கானம் இசைக்கும் போதெல்லாம்−உன்−

குரலாய் எனக்கது தெரிந்ததடி;

வானம் காட்டும் ஜாலமெல்லாம்−உன்

வதனத்தின் அழகென்றும் புரிந்ததடி;

தானம் கொஞ்சம் தருவாயா?−

நானும், உன் போல் ஆகிடவே!
புத்தம் புதிய பூவது போல்,

எத்தனை அழகு நீயடியே;

அத்தனையும் நான் அடைந்திடவே, ஒரு

பித்தனைப் போல், இங்கு ஓடி வந்தேன்;

முத்தம் என்னும் மோக மழை,

நித்தமும் பொழிந்தால் போதுமோடி?

மொத்த சுகமும் கிடைத்திடுமா? என்

நித்திலமே, அதை நீ சொல்வாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s