​நாச்சியார் மறுமொழி….(53)

ஆயன் குழல் அழைக்கிறதே;

அணு, அணுவாய், அதிர்கிறதே!

உள்ளெல்லாம் ஊர்ந்து, உன்மத்தம் ஆச்சு;

கள் தந்த போதையாய், கலங்கியும் போச்சு….(ஆயன்)
மயக்கத்திலே, மெய் மறந்து,

மடமங்கை போல் நின்றேன்;

தயக்கத்திலே இருந்தாலும்,

தவிப்பு வெல்ல, நான் தோற்றேன்;
யார் என்ன சொன்னால், எனக்கு தான் என்ன?

ஊருமே பேசும்; ஆதலால், என்ன?

ஏச்சினிலே, பேச்சினிலே,

என் ஏக்கம் தீர்ந்திடுமா?  (ஆயன்)
மனம் அங்கே சென்றதுவே,

மன்னனிடம் கலந்ததுவே;

வனம் திரியும் வடிவழகன்

வாய்ச்சுவையில், வாழ்ந்ததுவே!
நீல மேனியை, நெஞ்சு தாங்கிட,

கால நேரங்கள் காற்றில் பறந்திட,

எடுத்தது என்? கொடுத்தது என்?

தடுத்திடவும், வருவது யார்?  (ஆயன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s