​(நாச்சியார் மறுமொழி − 55)

காணும் இடங்களெல்லாம் அவன் சிரித்தான்;

கன்னி நிலை மறந்து, தனை இழந்தாள்;

வானில் உலவிடும் மதியினைப் போலே,

தானும், அவனுமே உறவென்றாள்! (காணும்)
வேங்குழல் ஓசையில், விதிர்த்து நின்றாள்;

விரகம் மேலிட, வையமும் மறந்தாள்;

ஆங்கவன் வருகையே பார்த்துமிருந்தாள்;

அண்ணல் அணைப்பதாய், எண்ணி மகிழ்ந்தாள்!
அந்தியின் சிவப்பிலே,  அதரமே கண்டாள்;

பிந்தைய இருளிலே, அவன் நிறம் கண்டாள்;

முந்தைய நினைவிலே, மூழ்கியே நின்றாள்;

ஏன் தயவில்லை என்று ஏங்கியே இருந்தாள்!

(காணும்)
கால்கள் பின்னிட, நடையும் மறந்தாள்;

கண்ணனின் கரம், தனை,  தாங்கிட விழைந்தாள்;

பாலினில் மறைந்த வெண்ணையைப் போல,

பாவை மனத்திலே, பரந்தாமன் வடிவம் கண்டாள்!!(காணும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s