(நாச்சியார் மறுமொழி − 57)

கண்ணனின் கை அணைக்கிறது;

கன்னி நெஞ்சம் நனைகிறது;

இந்த சுகம் போதும் என்று,

ஏழை மனம் சொல்கிறது!
அவன் விழியின் கருமணியாய்,

அன்புடனே வைத்தானே;

இவள் மொழியும் மறந்தவளாய்,

இதயத்தையே கொடுத்தாளே!
உள்ளமெல்லாம் மிதக்கிறதே;

உவகையிலே துவள்கிறதே;

பள்ளத்திலே பாயும் நீராய்−

பரவசத்தால் நிரம்பிடுதே!
மலர்மார்பில் குடியிருக்க,

மங்கை மனம் துடிக்கிறதே;

தளராமல் தாங்கியுமே−

தழுவிடவே வருவானா?
கன்னி இவள், அவன் உடைமை;

காதலுடன், ஏற்பானா?

தன் இதய மேடையிலே−

தனி இடமே தருவானா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s