​(யசோதா−கண்ணன் ஸம்வாதம் − 3)

யசோதா:−

அந்தி சாஞ்சுடும் போலிருக்கு;

அதுக்குள்ளே தயிரெல்லாம் கடைஞ்சுடணும்;

அட்டகாசம் பண்ணாம,

அம்மாவை கொஞ்சம் விட்டுடுடா!
கண்ணன்:−

அம்மா, உன்ன பாத்தாலே, 

ஆச தானா வந்துடுதே;

அடக்கி வெக்க முடியலயே;

அழுத்தி கட்டிக்க தோணிடுதே!
யசோதை:−

நெஜமா உனக்கு ஆசைன்னா,

நான் சொல்றத நீ கொஞ்சம் கேக்கணுமே;

நல்ல பிள்ளையா, நீ இப்போ,

நாலு அடி தள்ளி நிக்கணுமே!
கண்ணன்:−

அட, என்னம்மா, இப்படி சொல்லற நீ!

ஆசன்னு சொன்னா, நம்பல நீ!

அதுசரி, அடுப்பில என்ன வெச்ச?

அடிபிடிச்ச வாசனை தாங்கலயே!
யசோதை:−

நான் ஒண்ணும் அடுப்பில வக்கலையே;

நாத்தம், எனக்கொண்ணும் தெரியலையே;

நாடகம் ஆடி பாக்கறயா?

நான் நகந்தா, வேலய காட்டுவயே!
கண்ணன்:−

நல்லதுக்கு காலம் இது இல்ல;

நான் சொல்றத நீயும் நம்பலயே;

நானென்ன தயிருக்கா, இங்க வந்தேன்?

நேத்து தானே,  வயிறு  ரொம்ப சாப்பிட்டேனே!
யசோதை:−

ருசி கண்ட பூனை நீயாச்சே; உன்

ரகளை, எனக்கு ரொம்ப பழசாச்சே;

பசிக்கக் கூட வேணாமே; நீ

பாத்தாலே, பானை தயிரும் போயாச்சே!!
கண்ணன்:−

?????………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s