​(யசோதா− கண்ணன் ஸம்வாதம் − 5)

கண்ணன்:−

அம்மா, அம்மா, அடிக்காதே;

அவா சொல்றது,  எல்லாமே பொய் தான்;

சும்மாவானும் பழி போடறா;

சட்டுனு அதை நீ  நம்பாதே!
யசோதை:−

நெருப்பில்லாம புகையாதேடா;

நேத்தும் நாலு பேர், − சொன்னாளேடா;

கருப்பன் பண்ணற அட்டகாசம்

கண்டுக்கமாட்டயானு என்ன கேட்டாளேடா!
கண்ணன்:−

இதுக்குத்தான் சாதுவா இருக்கப்டாதுனு−

இப்ப எனக்கு புரியறது மா;

பதுக்கி, பானையில வெச்சுட்டு, வீண்

புரளி செய்யறாளே, புரியலயா?
யசோதை:−

உங்க அண்ணனும் கூடச் சொன்னானே;

உன்னை அவாத்து கொல்லைல பாத்தேன்னு!

என்கிட்ட கதையெல்லாம் சொல்லாதேடா;

எனக்கு, நீ யாருனு நன்னா தெரியுமேடா!
கண்ணன்:−

பெத்த பிள்ளைய நீ நம்பலயே;

நான்− 

பண்ண பாவம் அவ்வளவா?

மத்தவா எல்லாம் உனக்கு நல்லவாளா?

மனசும், உனக்கு உறுத்தலயா?
யசோதை:−

வக்கணை பேச்செல்லாம் வேணாம்டா;

வம்பு பண்றது உன் வாடிக்கைடா;

வெக்கம் கொஞ்சமும் இல்லாம,

வீடுவீடா போய்,  நீ தின்னுவயா?
கண்ணன்:−

வெண்ணய வாயில பூசிவிட்டு,

ஒன்ன நம்ப வச்சுட்டாளே;

என்ன ஒலகம்டா சாமி…

எனக்கு நல்லவா யாருனு, நீ காமி!!
யசோதை:−

! ! ! ! ! ! !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s