​(யசோதை− கண்ணன் ஸம்வாதம்  −  4)

கண்ணன்:−

அம்மா, 

“கருப்புக்கு நகை போட்டா,

காத தூரம் ஜொலிக்குமாமே;

இருக்கற நகையெல்லாம் 

எனக்கு போடு, 

நானும் அதை கொஞ்சம் பாக்கறேனே!
யசோதை:−

சங்கிலி, உன் அழகுக்கு முன்ன, ரொம்ப

மங்கி தான் போயிடுத்து, புரிஞ்சுக்கோடா;

சடை நாகம் வெச்சு பின்னனும்னா,

இடை வரை முடி உனக்கு வேணுமேடா!
கண்ணன்:−

காதுக்கு தொங்கட்டான் போட்டுடும்மா;நான்

குதிக்கச்சே, கூட அதுவும் ஆடுமேமா!

கழுத்துக்கு அட்டிகையும்  மாட்டிவிட்டா,

காண கண் கோடி தான் வேணுமேம்மா!
யசோதை:−

இதெல்லாம் கொஞ்சம் நீ தள்ளி வைடா; இந்த−

இடுப்புக்கு ஒட்டியாணம்−

எடுப்பா இருக்குமேடா!
கண்ணன்:−

அரைஞாண் ரொம்பவே அழகாயிருக்கே;

பிறைசந்திரன் வடிவம், அதில், ப்ரமாதமா தானிருக்கே!
யசோதை:−

ஐம்படைத்தாலியில் உன் அழகெல்லாம்,

ஜம்மென்று ரொம்பவே மின்னுதேடா;

அம்சமா நீ இருக்க! அதனாலே,

இந்த நகையெல்லாம், உனக்குத் தான் வேணுமாடா?
கண்ணன்:−

என்மேலே கொஞ்சமுமே பாசமில்லை;

உன் நகைய தர, உனக்கு மனசேயில்ல;

பொன் நகைய எனக்கு நீ போடாட்டா,

பின்ன, என்ன தான் அத வெச்சு,  நீ செய்யப் போற?
யசோதை:−

பொன் நகைய போட்டாலும், ஒண்ணும் பெரிசா இல்ல;

உன் புன்னகக்கு முன்ன அது

சிறிசாச்சேடா;

என் தங்கமும், வைரமுமா, நீயும் மின்ன−

இந்த நகையெல்லாம் போடணுமா என்ன?
கண்ணன்:−

நன்னாத் தான் சாக்கெல்லாம் சொல்லறயேம்மா!

நான் நெஜமாவே உன் மகனா, சொல்லிடேன்மா!

அம்மான்னா, ஆசையெல்லாம் இருக்குமேம்மா!

அது என் கிட்டே உனக்கேன் தான் 

கொறஞ்சதோ மா!
யசோதை:−

எப்படி தான் உன்ன நான் சமாளிப்பேன்டா!

எல்லாமே குத்தமா பாக்கறயே நீ!

என்கிட்டே இருக்கறதெல்லாம் உனக்கு தான்டா!

என் ஜென்மமே, உனக்காக, தெரியுமோடா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s