​(யசோதை−கண்ணன் ஸம்வாதம்…1)

யசோதை:−முத்தம் ஒன்று தாடா கண்ணா, 

கை நிறையும் வெண்ணை தருவேன்;
கண்ணன்:−

முத்தம் ஒன்று தருவதற்கு−

ஒரு பானை வெண்ணை
வேணும் அம்மா! 
சோதை:− கன்றை விட்டு கீழிறங்கு;
கறந்த பாலும், தயிரும் தரேன்!
கண்ணன்:−கறந்த பால் தருவதற்கு,
நிறைய பசு இருக்குதம்மா;
கட்டித் தயிர் வேணுமென்றால், நீ−
கண் அசர, கிடைக்குமம்மா!
சோதை: இப்படி எல்லாம் பேசினாலே
என்ன செய்வேன் தெரியுமாடா?
கண்ணன்: கட்டிப் போட கயிறெடுப்பாய்; அதை−
முடிச்சு போட தெரியாமல்,
முழித்துக் கொண்டு தானிருப்பாய்;
சோதை: பரிகாசம் செய்தாயானால்−
பழைய சோறு தான் தருவேன்!
பக்குவமா நடந்துக்கடா−
பாவமென்னு விட்டிடுவேன்!
கண்ணன்: சொன்ன பேச்சு கேக்கறேன் மா
−எனக்கு பழைய சோறு வேண்டாம் அம்மா;
வெண்ணை மட்டும் எங்கிருக்கு−அதை
சொன்னால் மட்டும் போதும் அம்மா!
முன்ன நீயும் கேட்ட மாதிரி−
முத்தம் ஒன்னும் தந்திடுவேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s