​(நாச்சியார் மறுமொழி − 61)

கண்ணா, உன்னை கண் தேடுதே;

காணாமலே, மனம் வாடுதே;

எந்நாளும்,  உன் மடி வேணுமே;

எனக்கானதாய், அது தோணுதே!
பிறந்தேனே பெண்ணாக, உனக்காக நான்; உனை−

நினைத்தேன், என் இளமைக்கு, வடிகாலாய் தான்;

மறந்தாயோ, மணமாலை கரம் ஏந்தத்தான்?−இந்த

மங்கைக்கு, தருவாய் உனை, வரமாகத்தான்!
எடுத்தாளும் நேரங்கள், விருந்தாகுமே; என்−

ஏக்கங்கள் தீர, அரு மருந்தாகுமே!

தடுத்தாள வருவாயா, தவிக்கின்றேனே!

தணல் மீது மெழுகாக, துடிக்கின்றேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s