(நங்கநல்லூர் ஆஞ்சநேயர்)

அச்சங்கள் ஆயிரம் அந்திப் பகலாய்

எமை அலைக்கழிக்க,

அஞ்சனை மைந்தா, அருமருந்தாய், உனது அடியிணை வந்தடைந்தோம்;
உச்சமாய், ஊழ்வினையும் உறுத்து வந்து எமை வறுத்தெடுக்க,

உன் திருநாமம் சொல்லி, எம் தீவினை பாற்றி நின்றோம்;
எச்சமான எம்வினைப்பயன்−

எதிர்வந்து கொக்கரிக்க,

எப்பொழுதிலும், “ராம” நாமம்

எமைக் காத்திட வேண்டி நின்றோம்;
சொச்சமான இவ்வாழ்நாளில், உன்

செந்தாள் இணையில் சிந்தை நின்றிட,

செந்துர மேனியா, நீ அருளவே,

துச்சமாய் தாண்டலாமே, எமது

துன்பம் எனும் பெருங்கடலே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s