​(நாச்சியார் மறுமொழி − 68)

ஏன் இந்த கோபம், அன்பே, 

என்ன உந்தன் தாபம்?

வாய் திறந்து பேசு−அழகே,

விரும்பினால், நீ ஏசு!
என்ன தவறிழைத்தேன் உனக்கு−என்று

இந்த தண்டனை எனக்கு!

எப்படியாயினும் தாக்கு! −ஆனால்,

ஏறிட்டு, எனை நீ நோக்கு!
அடிக்க நினைத்தால், அதை செய்−அதில்

அடைவேன் சுகமே, இது மெய்!

அலைக்கழிக்க மட்டும் எண்ணாதே−எனை

ஆறாத்துயரில் நீ தள்ளாதே!
ஒதுங்கிட மட்டும் எண்ணாதே;− எனை

ஒதுக்கிடும் எண்ணம், கொள்ளாதே!

ஓடி ஒளிந்து, நீ மறையாதே−இங்கு

ஓர் உயிர் பறந்திடும், மறவாதே!
உண்மையில் கோபம் கொண்டாயோ?−அன்றி,

ஊடலில், ஒரு சுகம் கண்டாயோ?

உள்ளம் திறந்து நீ கூறாயோ?−என்

உலகில் ஒளியென, வாராயோ?
வீண் பிடிவாதம் போகாதோ?−இது

வெறும் வெளி வேஷம் ஆகாதோ?

வஞ்சம் என்றும் மாறாதோ?−என்

வேதனை விரைவில் தீராதோ?
சீற்றம் கொஞ்சமும் குறையாதோ?−என்

சிரிப்பில், உன் மனம் நிறையாதோ?

சற்று, உன் நெஞ்சம் நெகிழாதோ?−நம்

சங்கமம் இங்கு நிகழாதோ?
மனதின் ஏக்கம் புரியாதோ?−என்

மனதில் யாரெனத் தெரியாதோ?

மன்னிப்பு நீயும் தாராயோ?−எனை

மறுபடி வந்து நீ சேராயோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s