(நாச்சியார் மறுமொழி − 70)


நினைக்க மாட்டேன்−

உனை நான் இனி!−ஏனெனில்

மறக்கவில்லையே மனம்,

மறுபடி நினைக்க!
தவிக்க மாட்டேன் −

தினம் உனைக் காண!−ஏனெனில்

நீங்கவில்லையே நெஞ்சில்,

உன் உருவம்!
துடிக்க மாட்டேன்−

உன் மொழி கேட்க!−ஏனெனில்

இதயத் துடிப்பில்,

ஒலிப்பது உன் கதைகள்!
கலங்க மாட்டேன் −

கண்விழி வீச்சில்!− ஏனெனில்

கரைந்து விட்டதே,

பெண் இதயம் அதிலே!
மயங்க மாட்டேன்,

மதுரமே உன்னிடம்! −ஏனெனில்

கிறங்கிய உள்ளமே,

திரும்பவில்லை இன்னமும்!
நெருங்க மாட்டேன்,

நீ இருக்குமிடம்!−ஏனெனில்

உன் இருப்பிடமோ−

என் இதய பீடம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s