(நாச்சியார் மறுமொழி − 71)


கனவில் வருவது நீ தானே! − என்

கருத்தைக் கவர்வதும்  நீ தானே!

நினைவில் நிற்பது நீ தானே!−என்

நெஞ்சில் நிறைவதும்  நீ தானே!
கரும்பின் சுவையோ உன் கனிவாயும்?−நல்ல

கனியின் ரசமோ, உன் இதழே!

அரும்பின் மணமோ, உன் ஆசை மொழி?−அந்த

அந்தியின் அழகோ, உன் புன்னகையே?
காலையின் துவக்கம், உன் நினைவினிலே;−நம்

காதலின் இலக்கணம், உன் அணைப்பினிலே;

மாலையின் மயக்கம், உன் மார்பினிலே;−இந்த

மங்கையின் வாழ்வோ, உன் மடியினிலே!
உதய நிலவாய் நம் வாழ்வு−என்றும்

ஒளிர்ந்திட, துணை நீ வருவாயா?

இதயம் மேவிய இன்னமுதே!−உன்

இரு கர மாலையை ,  நான் பெறுவேனா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s