(நாச்சியார் மறுமொழி − 74)

ஏன் உன் கண்ணில் அடிபட்டேன்?−நான்

ஏன் உன் வலையில் பிடிபட்டேன்?

ஏன் நான் காதல் வயப்பட்டேன்?−இன்று 

ஏன் நான் வேதனை வசப்பட்டேன்?
ஏன் என் நெஞ்சில் இடம் கொடுத்தேன்?−நான்

ஏன் உன் நினைவின் வடம் பிடித்தேன்?

ஏன் உன் நிழலைத் தேடி வந்தேன்?−இன்று

ஏன் ஒரு நிஜத்தில் வாடி நின்றேன்?
ஏன் என் விழியாய் உனை நினைத்தேன்?−நான்

ஏன் என் உயிராய் உனை மதித்தேன்?

ஏன் என் உலகென உனைக் கொண்டேன்?−இன்று

ஏன் என் உள்ளம் உருகக் கண்டேன்?
ஏன் உன் பார்வையில் மயங்கி நின்றேன்?−நான்

ஏன் உன் பாதையில் தயங்கி நின்றேன்?

ஏன் உன் வார்த்தையில் கிறங்கி நின்றேன்?−இன்று

ஏன் உன் வாசலில் கலங்கி நின்றேன்?
ஏன் நான் உறக்கத்தில் இருந்து விட்டேன்?−நான்

ஏன் பல கனவும் வரைந்து விட்டேன்?

ஏன் உன் உறவிற்கு பாலமிட்டேன்?−இன்று

ஏன் நான் கண்ணீர் கோலமிட்டேன்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s