​(கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்  −  5)

வசந்தத்தின் வரவில், எல்லா ஜீவராசிகளும் சந்தோஷமாக வளைய வருகின்ற போது, நான் மட்டும், உன் நினைவில், நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்…
உன் கைகளின் வெதுவெதுப்பும், உன் மேனியின் கதகதப்பும், எனக்கு மீண்டும் கிட்டுமானால், நான் புனர்ஜென்மம் எடுத்தவனாய் உணர்வேன்…
கனவிலாவது உன்னைக் காணலாம் என்றால், இந்த பாழும் உறக்கம், ஏனோ வர மறுக்கிறது…
இந்த அருவியின் நீரில் நாமிருவரும் நீராடிக் களித்த காலங்களை நினைவு கொள்ளும் போதெல்லாம், என் கண்களுக்கு அந்த அருவி, இடம் பெயர்ந்து விடுகிறது..
நிலவொளி தண்மை நிறைந்தது என்கிறார்கள்… எனக்கோ இது, வெந்தணலாய் எரிகிறது..
சலசலத்து சந்தோஷத்துடன் ஆரவாரமாய் ஓடும் இந்த யமுனைக் கூட, இப்பொழுதெல்லாம் சலனமற்று, சோபை இழந்து இருப்பதாக, எனக்குத் தெரிகிறது…
இந்த நந்தவனத்தைக் கடக்கின்ற போதெல்லாம், அதன் மலர்களின் நறுமணம், என்னை மிகவும் ஹிம்ஸிக்கிறது..
கூவுகின்ற குயில் முதல், கதறுகின்ற ஆவினம் வரை, அனைத்துமே, உன் பெயரைச் சொல்வதாக உணர்கிறேன் ராதே!..
ஒரே ஒரு முறை, உனது அழகிய அதரங்களைக் குவித்து, “கோவிந்தா” என்று 

என்னை நீ அழைத்தாயானால், உன்னை ஆலிங்கனம் செய்து கொண்ட த்ருப்தியை அடைவேனடி..
உனது ப்ரேமைக்கு நான் அடிமைப் பட்டிருப்பதில், உண்மையிலேயே, ஆனந்தம் அடைகிறேனடி… இதில், தவறேதும் இருப்பதாக, நான் நினைக்கவில்லை!
வா ராதே, வந்து உனது இரு விழியின் கனிவான பார்வையால், என் காதல்,நோய்க்கு மருந்திடுவாய்! மாதவன் பிழைத்துக் கொள்ளட்டும்!!
                    (முற்றும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s