​(நாச்சியார் மறுமொழி − 80)

கண்ணனின் காதல் உள்ளம்,

உனக்கேன் புரியவில்லை,

கன்னி நீ சொல்வாயடி, சகியே,

கனிந்தெனை கொள்வாயடி!

ஏன் இந்த ஊடலெல்லாம்?

வீண் போகும் நேரமெல்லாம்!

நான் என்ன செய்வேனடி? சகியே, என் நிலையோ−

வான் பார்த்த பூமியடி!
உனக்காக நானிருக்க, 

உள்ளம் ஏன் உடைந்தாயோ?

எனக்காக பிறந்தவள் நீ,

இதுவும் நீ அறியாயோ?

மனத்துள்ள காதலெல்லாம், 

−மறைப்பதும் ஏனடியோ?

சினமும் நீ போகவிடு, உன்

செவ்விதழ் திறந்து விடு!
நானுமே காத்திருக்கேன்;

நாளெல்லாம் பார்த்திருக்கேன்;

நங்கையே போதுமடி, இந்த

நாடகம் ஏதுக்கடி?

மானே, நான் வேண்டுகிறேன்−

மன்னிப்பு நீயும் கொடு! வாழ்வும்,

தேனாகத் தித்திக்குமே, என்

தோளில் நீ சேர்ந்து விடு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s