(picture courtesy: shri.Sankara Narayanan)
ஆத்தங்கரையினிலே, அண்ணல்

காத்திருப்பான் என்று,

நேத்து இரவு போதினிலே,

காத்து வந்து, சேதி சொன்னது!
ஆரும் அறியா வேளையிலே, 

அங்கு சென்று பார்த்திருந்தேன்;

பேரு சொல்லிக் கூப்பிடவும், 

பக்கம் யாரும் இருக்கவில்லை!
வெக்கத்தினை, உடையோடு,

களைந்து நீரில் குதித்த போது, 

வளைத்து என்னை நின்று விட்டான்−

துளைக்கும் பார்வை, துவண்டு விட்டேன்!
இதழோடு, இதழ் பதித்தான்;

கரத்தாலே, இடை அணைத்தான்;

அச்சம் கொஞ்சம் இருந்தாலும், 

துச்சம் தானே, அவன் துணை இருக்க!
இந்த இரவு நீண்டிருக்க, 

ஏழை மனம் ஏங்கியிருக்க,

வந்தவனோ வழக்கம் போல,

வஞ்சம் செய்து மாயமானான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s