(photo courtesy: shri.Sankara narayanan..)
பூவிலே வண்டு ஓடோடி

வந்தமர்வது போல,

நீ வந்து விடுகிறாய் கண்ணா, 

கன்னியரைக் கண்டால்;

எங்கு நீயில்லை எனத் தேடிப் பார்த்திட,

எமக்கு, என்றும் திறமை இருந்ததில்லை;

கங்குல் போதில், கண்காணாது வந்தாலும்,

அங்கும், எமக்கு முன் நீ வந்து விடுகிறாயே!
வம்பு வழக்கு வேண்டாம், 

இனியும் நமக்குள்ளே;

நம்புகிறோம் நாங்கள், 

நீ நல்லவனே என்று!

எம்பினால் எட்டிவிடலாம், ஆனால்,

எம் நிலையோ சரியில்லை;

தம்பிரானே, தயாபரனே, 

தந்திடுவாய் எம் கூறை!
குளிர் எம்மைக் கொல்லுதடா;

காத்திருக்க முடியவில்லை;

கதகதப்பு வேணுமடா, நீ

குதிக்கவோ, ஒரு தடையில்லை;

இதைத் தானே எதிர்பார்த்தாய்? எம்−

இயலாமையை, குறிபார்த்தாய்!

வதைக்காதே, வந்திடடா, உன்

வாலிபமும், நிறம் பெறுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s