​(நாச்சியார் மறுமொழி − 87)

தூங்காத பெண்மை கண்டேன்−என் நினைவில்,

தூங்காத பெண்மை கண்டேன்;

தாங்காத தனிமை எரிக்க−இங்கே,

தூங்காத பெண்மை கண்டேன்!
என்னை நீ மன்னிக்க வேண்டாம்; ஆனால்−

உன்னை நீ, தண்டிப்பதேனோ?

முன்னை என் தோள் சாய்ந்த−அந்த

பெண்ணை, யார் கொண்டு போனார்?
விரகம், விறகாய் எரிக்க−வெந்

நரகம், உனக்கேனோ மானே?

உறவாட, கண்ணே, நீ வருவாய்−என்

கரமாட, உன் மேனி தருவாய்!
கணை போன்ற விழியாலே தாக்கி−ஒரு

அணை போட, நினைக்காதே நீயும்;

துணை சேர துடிக்கின்ற நெஞ்சம்−நீ

அணைத்தாலே, இனி என்றும் ஆரும்;−நீ

அணைத்தாலே, இனி என்றும் ஆரும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s