​(நாச்சியார் மறுமொழி − 88)

இந்த காதல் என்னைப் படுத்துதடி,

இம்சை இதை, சொல்வதற்கு−

இல்லை ஒரு வார்த்தையடி!

இந்த காதல் என்னைப் படுத்துதடி!
எந்த ஒரு காரியமும் செய்ய விடாமல், 

உந்தன் உருவம் முன்னம் வந்து−

இந்த காதல், என்னைப் படுத்துதடி!
பாலும், தேனும் கசந்தெனக்கு−

பல நாளும் ஆச்சுதடி;

நாளும் பொழுதும் நெஞ்சில், உன்

நினைவு வந்து மோதுதடி!
கன்னத்திலே நீ பதித்த இதழின் இன்பம்,

இன்று தடவி பார்த்தாலும், துன்பமே தொலையும்!

என்னவளே, எனது இந்த அனுபவமெல்லாம்−

உனக்குமுண்டு என்பதையும், நானும் அறிவேன்!
இத்தனையே துன்பமுமே,நீ அனுபவித்தாலும்,

ஏழை என்னை, ஏனோ நீ, அலைக்கழிக்கின்றாய்;

எத்தனை நாள் நாடகமோ, இது என்று சொல்லு−

பித்தனுமே ஏங்குகின்றேன், நேர் வந்து நில்லு!
போதுமடி, போதுமடி, வல்லுயிர்ச்சாபம்!

வேணுமடி, வேணுமடி, எனக்குந்தன் நேசம்!

ஏதுக்கடி, ஏதுக்கடி, இத்தனை கோபம்?

ஏற்றுக்கடி, ஏற்றுக்கடி, என்னையும் நீயும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s