​(நாச்சியார் மறுமொழி − 91)

ஏய்க்காது, நான் வந்தேன் இங்கு−எனை

ஏறிட்டுப் பார்ப்பாய், நீ இன்று; செவி−

சாய்க்காதிருந்தாலே தேவி, இந்த−

சோதை மகனும், ஏது செய்வான்?
உதாசீனம் நீ செய்தாலும்,

உன்னையே நாடி வந்தேன், பெண்ணே;

சதா என் பின்னாலே,

சுந்தரியர் கூட்டம் உண்டு, கண்ணே!
நாதன் உனக்கே ஆனேன்−பிற

நங்கையர், ஏறெடுத்தும் பாரேன்;

ஈது, உன் உள்ளமும் அறியும்−நான்,

இனி, என்ன தான் சொல்ல முடியும்?
கலங்கி வந்தேன் உன்னிடமே−என்

கனத்த இதயம் அழுத்திடவே;

இரங்கி, ஒரு முறைப் பார்த்திடுவாய்−என்

இதயம், அதிலே உயிர்த்திடுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s